மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள் 36 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போதைய உலகளாவிய அரசியல் நகர்வுகள் குறித்துக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு விருப்பத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இது ஆசிய பிராந்தியத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாகும். மத்திய கிழக்கு போர்ச் சூழலானது தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலை நீடித்தால் அது ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Economic Collapse) வழிவகுக்கும். போரினால் ஏற்படும் பொருளாதாரச் சுமை காரணமாக ஆசிய நாடுகளுக்குள் மக்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.

இது உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சர்வதேச ரீதியிலான இந்தப் போர்ச் சூழல் இலங்கைக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்கும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments