யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி – கஞ்சா மீட்பு – ஒருவர் கைதுயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சா மற்றும் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு தொகை கஞ்சாவும் சிறிய ரக கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, குறித்த வீட்டில் வசித்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி - கஞ்சா மீட்பு - ஒருவர் கைது | Man Arrested By Police In The Valvettithurai

கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments