உக்ரைனில் மேலும் இரண்டு குடியிருப்புகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா இன்று செவ்வாயன்று (21)உரிமை கோரியுள்ளது.

உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹிரிஷைன் கிராமத்தையும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள வெட்டரினார்னே கிராமத்தையும் தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

 இரண்டு மாதங்களில் கைப்பற்றப்பட்ட 700 சதுர கிலோமீட்டர்

முன்னதாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும், ரஷ்யப் படைகள் 34 குடியிருப்புகளையும், சுமார் 700 சதுர கிலோமீட்டர் (434 சதுர மைல்கள்) நிலப்பரப்பையும் கைப்பற்றியதாகப் பொதுப் படைத் தலைவர் வலேரி கெராசிமோவ் கூறியிருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரஷ்யப் படைகள் 80 குடியிருப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.

எனினும் ரஷ்யாவின் இந்தக் கூற்றுகளுக்கு உக்ரைன் இன்னும் பதிலளிக்கவில்லை 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments