மகனின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ, கொத்தல கெமியாவ பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 ஆரம்பகட்ட விசாரணை

உயிரிழந்தவருக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகனுக்கும் தந்தைக்கும் இடையில் புதன்கிழமை (22) இரவு ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது.

இதன்போது மகன் தந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளதாகவும் இதன்போது தந்தை நிலத்தில் சரிந்து விழுந்ததில், அவரது தலை கட்டிலில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவிய நீண்டகால தர்க்கம் எல்லை மீறியதாலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments