தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தளபதி என்று அழைக்கப்படும் சி. ஜோசப் விஜய்க்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இன்று(06) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் மேற்படி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இருதரப்பு உறவுகள்தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்துள்ள முன்னாள் ஜனாதிபதி, புதிய நிர்வாகத்தின் கீழ் இருதரப்பு உறவுகளும் மேலும் வலுவடையும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விஜய் தனது எதிர்கால முயற்சிகளில் வலிமையையும் வெற்றியையும் பெற வாழ்த்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments