தனது முதல் உரையை ஆற்றி முடித்துள்ள முதலமைச்சர் விஜய், பாதுகாப்புப் படைகள் சூழ அரச வாகனத்தில் சென்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரியணையில் சற்று முன்னர் அமர்ந்துள்ளார்.
இதன்போது தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சருக்கு வீதிகளின் இருபக்கமும் மக்கள் சூழ்ந்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அரியணையில் அமர்ந்த முதலமைச்சர் விஜயை முக்கிய அதிகாரிகள் வரவேற்றதுடன் முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அத்தோடு தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளார். இதற்கமைய நாளை
(10-05-2026) புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 ஐந்தாம் இணைப்பு
தமிழக ஆளுநரிடம் முறைப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கையோடு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய், தற்போது மேடையில் உரையாற்றத் தயாராகியுள்ளார்.
கோடிக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த முதலமைச்சரின் அந்த முதல் உரை, இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது.
பதவியேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகள் மற்றும் அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவர் தனது உரையில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 நான்காம் இணைப்பு
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் விஜய்க்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் விண்ணதிரும் முழக்கங்கள் மற்றும் உற்சாக ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் பயணத்தை விஜய் இன்று முறைப்படி தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 மூன்றாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய்யிற்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விழா இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஆளுநரை சந்தித்த விஜய், அவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றுள்ளார்.
விஜய்யுடன் சேர்ந்து நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 இரண்டாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்னை நேரு உள்விளையாட்டரங்கிற்கு வருகை தந்துள்ளார்.
அரங்கிற்கு வருகை தந்த அவருக்குத் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாகமான மற்றும் சம்பிரதாயப் பூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் முக்கியஸ்தர்களும் தொடர்ச்சியாக வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.
இன்று (10-05-2026) காலை 10 மணியளவில், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முன்னிலையில் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா இன்று (10-05-2026) காலை 10 மணிக்குச் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Stadium) நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று (09-05-2026) மாலை தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் (R. V. Arlekar) சந்தித்து காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதலமைச்சராகப் பதவி
அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை முதலமைச்சராகப் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார்.
இதன்படி, காங்கிரஸ் (5 இடங்கள்), இந்திய கம்யூனிஸ்டு (2 இடங்கள்), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2 இடங்கள்), விசிக (2 இடங்கள்) மற்றும் ஐ.யு.மு.லீ. (2 இடங்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகத் விஜய் தனது இல்லத்தில் இருந்து தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் விழா மேடைக்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
