ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கு உதவியதாக மூன்று நபர்கள் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் மீது திங்கட்கிழமை அன்று இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஹொங்காங்கைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் மற்றும் ஓமானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய நோக்கம்
ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி சீனாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதைத் தடுப்பதே இந்த அமெரிக்க தடைகளின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

Image Credit: Caspianpost.com
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை ஈரான் கொள்முதல் செய்வதற்கு உதவிய நிறுவனங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
