ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கம் தனது பெரும்பான்மையை காண்பிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்த கோரிக்கையை விடுத்தார்.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை உறுதி செய்ய வேண்டும் ; வி.சி.க. வலியுறுத்தல் | The Right To Autonomy Eelam Tamils Must Be Ensured

இந்த நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்க தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு கோரிக்கை விடுத்தார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments