சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த எரிவாயு வெடிப்பு, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் நிகழ்ந்த மிக மோசமான சுரங்கப் பேரழிவாகும்.

இந்த வெடிவிபத்து நிகழ்ந்தபோது, ​​247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் உத்தரவு

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், முழுமையான மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்து : 90 பேர் உயிரிழப்பு | 90 Killed In Chinese Coal Mine Explosion

மேலும், இந்த விபத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பெரிய விபத்துகளைத் தடுக்க ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், சீன துணைப் பிரதமர் ஜாங் குவோசிங் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments