லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 29 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி  ஏற்பட்டுள்ளது.

 இருவர் மருத்துவமனையில்… 

சம்பவத்திற்கு முன்னதாக,ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,ஈஸ்ட்கோட் லேன் சாலையில் எதிர் திசையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் கவனித்தனர்.எனினும் அவர்கள் பின் தொடர்ந்த நிலையில் கார் மத்துடன் மீதி விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்த நிலையில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் 25 வயது மற்றும் 20 வயதுகளில் உள்ள இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இளைனனின் மரணம் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments