காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு ரயில் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

சாலியபுரப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 கோரிக்கை

உயிரிழந்தவர், சாலியபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.

சுயதொழில் செய்து வந்த அவர், அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

இருப்பினும், குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் தடைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும், காவலரும் யாரும் பணியில் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், ரயில் தண்டவாளம் இருபுறமும் வளைந்து நெளிந்து செல்வதால், தண்டவாளத்துக்குள் நுழையும் வரை இருபுறமும் உள்ள சாலை தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ரயில் தண்டவாளத்தில் மற்றொரு கொடிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments