ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் புதிய எச்சரிக்கை

ஈரான் மற்றும் அமெரிக்க படைகள் இடையிலான போர் மோதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இருதரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஈரான் தொடர்ந்து அணுசக்தி திட்டங்கள் தொடர்பான விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறது.

இருப்பினும் இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது: அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை | Us Impose New Sanctions Over Iran Oil

இந்நிலையில், ஈரான் தொடர்பில் அமெரிக்கா புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொருளாதார தடை

அதில், ஈரானுடன் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்தவொரு  நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை கொண்டு சென்ற 8 நிறுவனங்களுக்கு சொந்தமான 8 கப்பல்கள் முடக்கப்படுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

அதே சமயம் ஈரானின் கச்சா எண்ணெயை சேமித்து விற்பனை செய்து வந்த ஹாங்காங் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments