முதல்வர் விஜய் திருச்சியில் இன்று பேசும் போது தன்னுடைய உடை கோட் சூட் பற்றி விமர்சித்தவர்களுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம் | Why Wear Coat Suits Explanation Given Cm Vijay

முதல்வர் விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார்.

முதலமைச்சராகப் பதவியேற்றது முதலே அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ‘கோட் சூட்’ அணிந்து வருகிறார்.

தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் இதே உடையில் பங்கேற்பது குறித்துச் சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தன. இது குறித்து அவர் இன்று திருச்சியில் பேசி இருந்தார். 

ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம் | Why Wear Coat Suits Explanation Given Cm Vijay

விளக்கம் கொடுத்த விஜய்

திருச்சியில் பேசிய விஜய்“புதுசாக நாம் சூட் எல்லாம் போட்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றிக் கூட நிறைய பேர் விமர்சிக்கிறார்கள்.

ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும், ஆதிக்கச் சக்திகளும் மட்டும்தான் கோட் சூட் எல்லாம் போட வேண்டுமா என்ன? அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.

நான் என்ன கலர் கலராகவா கோட் சூட் போட்டு வருகிறேன்? இரண்டே இரண்டு கலர்தான். அது நம் எல்லோர் மனதையும் போல பிளாக் அண்ட் ஒயிட்.

ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம் | Why Wear Coat Suits Explanation Given Cm Vijay

எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட்டாக (வெளிப்படையாக) இந்த விஜய் இருப்பான் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அந்த உடை.

அந்தப் பிளாக்கில் இருக்கிற கருப்பு கூட யாரைக் குறிக்கும், எதைக் குறிக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

எல்லாவற்றிற்கும் இதுபோல விளக்கம் சொல்லிக்கொண்டு, நசநசவென்று பேசுவது நம்ம ஸ்டைல் கிடையாது. உங்களுக்கே தெரியும், அதிகபட்சமாக எல்லா மீட்டிங்கிலும் 20 நிமிடம் மட்டுமே நான் பேசி இருக்கிறேன்.

ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம் | Why Wear Coat Suits Explanation Given Cm Vijay

அதனால் இப்போது மக்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘விஜய்… நீ எங்களுக்காக உழைக்க வந்திருக்கிறாய், அந்த வேலையை மட்டும் பார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments