அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியாகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாமலின் வாழ்த்து

அதில், “ இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இளம்கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பதுதான் இங்கு முக்கியமானது. அது நடந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று நாமல் தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கலைஞர் தனது திறமையையும் அபிலாஷைகளையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாகவும், அவருக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments