ஈரானிடம் ஒரு அணுக்குண்டு இருந்தால், இஸ்ரேல் இரண்டு மணிநேரத்தில்; காணாமல் போகும் என நெதன்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தையடுத்து இப்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னால் உள்ள ஊடகங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அர்ச்சனைகளை ஆரம்பித்துவிட்டன.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்காத நிலையில் ட்ரம்ப் ஈரானிடம் தோல்வியடைந்தாக எள்ளல் செய்யும் நெதன்யாகு புறொக்சிகள் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸை ஒரு அயோக்கியன் என்றும் அமெரிக்க தரப்பில் உள்ள ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோர் கட்டாரின் பணத்துக்கு விலைபோய் இஸ்ரேல் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும் எகிறியுள்ளனர்.

இப்போது எதிர்வரும் வெள்ளியன்று ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வை குழப்பும் வகையில் லெபனான் விடயத்தில் இஸ்ரேல் திடீர் கடுமை நிலை எடுத்து லெபனான், சிரியா மற்றும் காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைத்திருக்கும் என அறிவித்துள்ள நிலையில் இந்த நிலவரங்களுடன் வருகிறது செய்திவீச்சு,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments