இந்நிலையில் இன்றையதினம் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி, அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

மீள் குடியேற்ற கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு | Protests In Jaffna Demanding Resettlement

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது தமது காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை அடங்கிய மனு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் ஆளுநரிடமும் சென்று மனு கையளித்தனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்களிடமும் மனு கையளித்தனர். குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரதேச சபை தவிசாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments