புதிய இணைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) பரிசீலிக்கவுள்ளது.

இந்த மனு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு பரிசீலனை

இதன்போது, வழக்கின் உண்மைகளைச் சரிபார்ப்பதற்காக இம்மனுவை இன்றைய தினம் மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தன்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு | Petition Filed By Gotabaya Considered Today

Advertisement

அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments