யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்டகாலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து , கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளின் பணிப்பும் சிப்பாயின் உயிரிழப்பும்

இதனையடுத்து சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் தொடருந்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு | Army Soldier Dies In Collision Train In Jaffna

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments