யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்- பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.6.2026) இட்பெற்றுள்ளது.
அச்சுவேலி பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன் சாரதி அனுமதிப்பத்திரத்தினைப் பெறுவதற்கு வாகன பயிற்சியினை மேற்கொண்ட வேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
பண்ணைப் பகுதியில் வாகன பயிற்சியை மேற்கொண்டதன் பின்னர், வாகனத்திலிருந்து வீதியில் இறங்கிய போது வீதியின் பின்புறத்தில் இருந்து வந்த லொறி மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
