நெடுந்தீவில் காணாமல் போன மீனவரின் சடலம் இந்தியாவில் மீட்பு – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் இன்றையதினம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த கடற்றொழிலாளர் கடந்த 11 ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார்.

யாழ். நெடுந்தீவில் காணாமல் போன மீனவரின் சடலம் இந்தியாவில் மீட்பு | Body Missing Fisherman Jaffna Recovered India

இந்த விடயம் தொடர்பில், காவல்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இன்றையதினம் அவரது உடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய விசாரணைகளின் பின்னர் அவரது உடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments