“வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு உங்களுடன் இணைந்து செயல்பட நான் தயார். இத்தகைய வரலாற்றுப் பணியை செய்ய எல்லோரும் தயாரா” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில்,

அச்சமடைந்த சூழ்நிலை

ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்கு கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவது எமது நோக்கமல்ல. அவர்களை மீண்டும் இந்த மண்ணின் உண்மையான பங்காளிகளாக, நம்முடைய தலைவர்களாக மாற்ற வேண்டும்.

மேலும், அவர்கள் போர்க்களங்களில் நின்று எந்த இலட்சியத்திற்காகப் போராடினார்களோ, அதனை இப்போதும் செய்யட்டும்.

வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல் | Sridharan North East Provincial Powers Militants

2010ஆம் ஆண்டுகளிலும் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளிலும், “முன்னாள் போராளிகள்” என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கே அச்சமடைந்த ஒரு சூழ்நிலை இந்த நாட்டில் நிலவியது.

ஆனால், அத்தகைய அச்சம் நிறைந்த காலங்கள் கடந்து, இன்று “நாங்கள் போராளிகள்” என பெருமையோடு மார்பு தட்டிச்சொல்லும் அளவிற்கு ஒரு புதிய காலமும் சக்தியும் பிறந்துள்ளது.

இன்று சர்வதேச இராஜதந்திரிகள் நம்மோடு உரையாடுவதற்கும், சர்வதேச சமூகம் நம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி, பிரத்தியேக அக்கறை செலுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் போராளிகளாகிய நீங்கள் தான்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் – புதிய நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை

யுத்தம் நிறைவடைந்த பின்பும், போராளிகள் தங்களின் தலைமைத்துவப் பண்புகளைத் தக்கவைத்துக் கொண்டு, சமூகத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். இது தான் எமது தலைவரின் தனித்துவமான வளர்ப்பிற்குச் சான்றாகும். இதனால் தான் போராளிகளை இந்த மண்ணில் என்றும் நிலைநிறுத்த முடிகிறது.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், அரசின் சட்டத்துறையும் போராளிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் இன்னமும் தன் அடக்குமுறைகளைப் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கின்றன.

வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல் | Sridharan North East Provincial Powers Militants

தற்போது போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் பணிகள் விரிவடைந்து வளர்ச்சியடைந்துள்ளன. அதன் காலோசிதமான பணிகள் இன்று எல்லோருக்கும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளன.

எனவே, புலம்பெயர்ந்து வாழும் நமது உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக முன்வந்து, இந்த நலன்புரிச் சங்கத்தின் ஊடாகப் போராளிகளின் குடும்பங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்த உதவ வேண்டும்.

நமக்காகப் போராடியவர்களே “எங்களைக் கொல்ல வந்தார்கள்” என்று பழிசுமத்தி நாமே சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

சுயநல அரசியல் பிழைப்பு

ஆனால் இன்று, அதே போராளிகளை முன்னிறுத்தி, அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, “இது உங்கள் கட்சி, அண்ணன் காட்டிய சின்னம்” என சிலர் சுயநல அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.

இதனை நாம் எவ்வாறு சகித்துக் கொள்வது? மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கு இத்தகைய போலித்தனமான அரசியலே முதன்மைக் காரணமாகும்.

வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல் | Sridharan North East Provincial Powers Militants

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன், கிளிநொச்சியில் உள்ள 40 வட்டாரங்களில், 13 வட்டாரங்கள் இன்று போராளிகளின் கைகளில்தான் உள்ளன. அவர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே நாம் எமது அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.

கிளிநொச்சி மண் இன்று நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு மாவீரர்களது தியாகமும், போராளிகள் சிந்திய இரத்தமுமே காரணம்.

எனவே, போராளிகள் எமது சமூகத்தைத் தலைமை தாங்கட்டும்; நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது அரசியலை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments