மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று(28) மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்த காரணத்தினால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

புதுப்பாலம்

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இப்பாலத்தின் வீதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் அதிர்ச்சி: பிரதான புதுப்பாலம் உடைந்து சேதம்.. | New Bridge Leading Into Batticaloa Town Collapsed

பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாவிக்கும் இந்த வீதியினை தினமும் பெருமளவான பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் காவு வண்டிகளும் இந்த வீதியினை கூடுதலாக பாவித்துவருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி

இந்த நிலையில் இந்த பாலம் இடிந்துவீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பெருமளவான மக்கள் இடிந்துவீழ்ந்த பாலத்தினை பார்வையிட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பில் அதிர்ச்சி: பிரதான புதுப்பாலம் உடைந்து சேதம்.. | New Bridge Leading Into Batticaloa Town Collapsed

இதேநேரம் குறித்த இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை ஆணையாளர் குறித்த பகுதிகளில் நிலைமைகளை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு நகருக்குள் இரண்டு பிரதான பாலங்கள் நுழையும் வகையில் உள்ள நிலையில் ஒரு பாலம் உடைந்துவீழ்ந்துள்ளதன் காரணமாக ஒரு பாலத்தினையோ பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments