கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய தேயிலைத் தோட்டக்காரர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பெரும் வருவாயை ஈட்டித் தரும் தேயிலைத் தொழிலை முறையாக நிர்வகித்தால், நாட்டின் முழு வெளிநாட்டுக் கடனையும் இரண்டே ஆண்டுகளில் அடைத்துவிட முடியும்.

மூடப்படும் தேயிலை தொழிற்சாலைகள்

இருப்பினும், தற்போது இந்தத் தொழில் முழுவதும் ஒரு சில செல்வந்தர்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அவர்கள் தங்களின் தனிப்பட்ட செல்வத்தை அதிகரிப்பதற்காக மட்டுமே இந்த துறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 சதவீதப் பங்களிப்பைச் செய்கின்றனர்.

இருப்பினும், தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலைகள் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 250 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

130 மில்லியன் டொலரை தாண்டும் வருமானம்

ஒரு நாளைக்கு சுமார் 30,000 கிலோ தேயிலையைப் பதப்படுத்திய சக்திவாய்ந்த தொழிற்சாலைகளும் அவற்றில் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர் வீழ்ச்சி - இலங்கை பொருளாதாரத்தில் 1.3 பில்லியன் டொலர் இழப்பு | Tea Factories In Sri Lanka Continue To Decline

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்து, மாதத்திற்கு 110-120 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இந்தத் தொழில், தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச்செய்கையாளர்கள் தனது தோட்டத்தைப் பராமரிக்க முடியாமல் நிராதரவாக இருக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனைக் கவனிக்காமல் குளிர் அறைகளில் அமர்ந்துகொண்டு மௌனமாக இருக்கிறார்கள் என விசனம் தெரிவித்துள்ளார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments