நம் உடலில் Circadian rhythm என்பது நாம் எப்போது தூங்குகிறோம், எழுகிறோம், ஹார்மோன்கள் ஆக்டிவாக இருப்பது போன்ற செயல்களை நிர்ணயிக்கிறது. இந்த Circadian rhythm ஒளியை வைத்தே இந்த செயல்களை செய்ய தீர்மானிக்கும். தற்போது செயற்கையாக மின் விளக்குகள் வந்ததால், அனைத்தும் மாறிவிட்டது. பல நூற்றாண்டுகளாகப் பழகி வந்த பழக்கம் மாறிவிட்டது.

இரவு விளக்குகள் அணையாமல் இருக்கும் காரணத்தால் Circadian rhythm ஆக்டிவாகவே இருக்கிறது. இதனால், தூங்குவதற்கான ஹார்மோனான மெலட்டானின் போன்றவை சுரப்பதில்லை. உணவையும் தாமதமாக எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள எல்லா ஹார்மோனும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதனால்தான் இரவு உணவை சாப்பிடுவது ஆபத்தானது. அதனால்தான் பெரும்பாலான நோய்கள் வருவதாக சொல்லப்படுகிறது. 

இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது பசியை இது தூண்டுகிறது, உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது, பகல் நேரங்களில் செலவிடும் எனர்ஜியை குறைக்கிறது, சர்க்கரையை சமன்படுத்தக்கூடிய நிலையை மாற்றுகிறது, உணவு ஜீரணமாகும் தன்மை மாறுகிறது, ஓய்வு எடுக்கும்போது எரிசக்தி மாறுகிறது. இரவு தாமதமாக உணவு சாப்பிடுவதால் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், ஒரு நாள் உணவில் 50 சதவீதத்திற்கு மேல் இரவு உணவாக சாப்பிடுவது உடல் பருமனை பன்மடங்கு அதிகரிக்கும்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments