அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானிய தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடிவரும் நிலையிலும், ஈரானின் புதிய உச்சத் தலைவரான அவரது மகன் எங்கே இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
ஈரானின் புதிய உச்சத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே, மொஜ்தபா கமெனி இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை.
பாதுகாப்பு காரணம்
இந்த நிலையில், இது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகரித்துள்ளதோடு, நாட்டை யார் வழிநடத்துகிறார்கள் என்பது குறித்த கேள்விகளுக்கும் வலுத்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய அரசாங்கம் பல நிகழ்வுகளை விவரித்திருந்தாலும், மொஜ்தபா தோன்றுவதற்கான எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய எந்தவொரு முடிவும் முன்கூட்டியே பகிரங்கப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
காயமடைந்துள்ள மொஜ்தபா
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அவரது தந்தை, தாய் மற்றும் மனைவி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்திருக்கலாம் என்றே கூறப்பட்டு வருகிறது.
Advertisement

Image Credit: Asharq Al-Awsat
மேலும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலம் மட்டுமே அவர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்புகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
