யாழ்ப்பாணம் “கொமோண்டோ” பங்களா முன்பாக போராட்டம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் (10) 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதிகளில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments