இந்தியா கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் உஸ்பெகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த்–மினி தம்பதியின் மகள் சாகர்யா (21), உஸ்பெகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

அதே கல்லூரியில் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் கல்வி பயின்று வந்துள்ளார்.

வெளிநாட்டில் மருத்துவ மாணவி மரணம் ; விசாரணையில் வெளியான புதிய தகவல்கள் | Student Dies Abroad New Information Investigation

இருவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி சாகர்யா மடிக்கணினியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சாகர்யாவை மதம் மாறுமாறு வற்புறுத்தி சாதருள் அனாம் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து, அவரை உஸ்பெகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சாகர்யாவின் உடல் விமானம் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு கொண்டு வரப்பட்டது.

உறவினர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர், சாகர்யாவின் உடல் அவரது சொந்த வீட்டுத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது அவரது சகோதரர் சாவந்த் சிதைக்கு தீ மூட்டினார்.

இதேவேளை, சாகர்யாவின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சாதருள் அனாமுக்கு எதிராக ஹரிப்பாடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments