ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், கிழக்கு நேரப்படி (ET) பிற்பகல் 3 மணி முதல் ஈரான் மீது ஒரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கட்டளையகம்
ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
