செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செப்பிலான மோதிரம் 

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணி: மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் | Excavation Work Continues In Chemmani

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments