சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.

அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியம் நிறைந்த இந்த  முருங்கைக்கீரை தண்ணீ குழம்பை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை தண்ணீ குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு- 1 கைப்பிடி
  • தண்ணீர்- 1 கப்
  • மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
  • பூண்டு- 1 பல்
  • எண்ணெய் – 1½ ஸ்பூன்
  • வெந்தயம்- ½ ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • சின்ன வெங்காயம்- 15
  • பூண்டு- 5 பல்
  • தக்காளி- 1
  • உப்பு – தேவையான அளவு
  • அரிசி கழுவிய நீர்- ½ லிட்டர்
  • பெருங்காயத் தூள்- ½ ஸ்பூன்
  • முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
  • துருவிய தேங்காய்- 1 கப்
  • சீரகம்- 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரிசி கழுவிய நீரை ஊற்றி, அத்துடன் வேக வைத்த பருப்பை மசித்து சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இதற்கடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியாக இதில் கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முருங்கைக்கீரை தண்ணி குழம்பு தயார்.    

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments