செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.

 தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.

செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

Advertisement

நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களுக்கு ஏமாற்றும் அரசின் கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமாந்து போகக்கூட்டது. அந்த வகையில் நாளையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.

செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணை : வலியுறுத்தி நாளை போராட்டம் | Demanding International Investigation Chemmani

காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் -எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments