வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன்(வயது31) மற்றும் எம். லூசிநாத் (வயது30) என அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கைது

  அந்த இருவரையும், சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரகாவல்துறையினர், வெள்ளிக்கிழமை(234) தனுஷ்கோடி கடற்கரையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதையடுத்து கைது செய்தனர்.

வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது | Two Sri Lankans Wattala Shooting Detained In India

விசாரணைக்காக இருவரும் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன.

மேலும் விசாரணை செய்தபோது,கடந்த ​​வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments