எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை – மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் (வயது 75) ஆவார்.
