திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்தச் கோர விபத்து சம்பவித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது 21), மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன் என்பதும், மற்றையவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடலங்கள் இரண்டும் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


