புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ள

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.

ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு | Iran Denies Trump S Statement Ask Not To Attack

Advertisement

இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.

எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்

அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு | Iran Denies Trump S Statement Ask Not To Attack

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் வணிகக் கப்பல்கள் இதன் வழியே கடந்து செல்வதற்கு ஈரானிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments