.
அவளுக்குள்ளும் பல கனவுகள் இருந்திருக்கும்.
தன் பிள்ளை எதிர்காலத்தில்
என்னவாக வரவேண்டுமென
எல்லா அம்மாக்களுக்கும்…
ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்..
பேனா பிடிக்க வேண்டும் என விரும்பிய அம்மாக்களில்
தன் பிள்ளை
துப்பாக்கி ஏந்த வேண்டும்.. என
விரும்பிய அம்மா இவள்…
தன் ஆசைகளை யெல்லாம்..
இந்த மக்களுக்காகவே..
அவள் புறந்தள்ளினாள்….
என்றுமே அவள்
ஆடம்பரமாக வாழ எண்ணியதில்லை
போராளியின் மனைவியாக
வாழ்வதென்பது
அவ்வளவு இலகுவானதல்ல…
குண்டுச் சத்தங்களின் நடுவே தான்
அவள் குடும்பம் நடத்தினாள்…
எத்தனை தியாகங்களை அவள்
தேசத்துக்காக செய்திருக்கிறாள்.
எத்தனை மனவலிமை
அவளிடமிருந்தது…
நாளைக்கு நிச்சயமில்லாத
வாழ்க்கையை தான்
அவள் விரும்பி ஏற்றிருந்தாள்..
அவள் தாங்கிய வேதனைகள்
அவள் சந்தித்த சோதனைகள்
அவள் அனுபவித்த துன்பங்கள்
எத்தனை எத்தனை?
ஒரு தாயாய். மனைவியாய்
இந்த மண்ணுக்காய்..
தனது வாழ்நாள் முழுவதையும்
அர்ப்பணித்திருக்கிறாள் அவள்…
உலகத்தமிழினத்தை
தலை நிமிரவைத்த
அந்த குடும்பத்தின் ஒளி விளக்கு
அவள் தானே..
இறுதியில்..
இந்த மண்ணுக்காவே
இந்த மக்களுக்காகவே
அவளும் மடிந்து போனாள்..
அவள் கனவுகளும் மடிந்து போனது
-ஈழமாறன்-
