வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம், சூடுவெந்தபிலவு பகுதியில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Ads By Google

Ad will close in 24Skip Ad

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

மேலும், காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments