திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மரணம் தற்கொலையா அல்லது கொலையா…
சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டைக்கு புறப்படுவதற்கு முன்பு, அந்த நபர் வெலிகம, மிடிகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
