யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சைக்கு தோற்றியபோது மயக்கமடைந்துள்ளார். இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 வலிப்பு ஏற்பட்டு மரணம்

சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.

யாழில் துயரம்: உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் திடீரென உயிரிழப்பு! | Student Writing A L Exams Dies In Jaffna

பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார்.

Advertisement

உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments