தமிழ் உறவுகளுக்காக மக்களின் முக்கிய கோரிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடு இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் கலந்து கொண்டு தமது ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும்  உள்ளிட்ட பல கோரிக்கைகள் போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டன.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று, தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிக்குரல் லண்டன் வீதிகளில் மீண்டும் வலுவாக ஒலித்தது.

GalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments