கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக குழந்தை வாகனச் சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சோகச் சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.Cancel

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments