கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலிகிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மகிழுந்தின் சாரதி, கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொது வைத்தியசாலை
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்


