புதிய இணைப்பு
தெஹிவளையில் உள்ள சிறிசகபோ சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி , பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை (11) நடந்த இந்த குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
காயமடைந்த அவர்களது தந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலாம் இணைப்பு
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! காவல்துறை வெளிப்படுத்திய பரபரப்புத் தகவல்
வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உந்துருளியில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
