தமிழீழம் வேண்டாம் ;அர்ச்சுனா எம்பி எம்முடன் இருப்பதில் தவறு இல்லை ; உதய கம்மன்பில உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   இதன்போது அவர்  மேலும்  கூறுகையில்,

தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம்

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை ஆதரிக்க வேண்டும்.

அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் ” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments