அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியாவில் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.

மாணவர் விசாக்களை புதுப்பிக்க

கடந்த 2023ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.

அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள் | Australian Migration Reforms

இதையடுத்து அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments