தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் அனுஷ்டிப்பு தமிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் நேற்று(26.09.2026) பிலக்குடியிருப்பு பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

நினைவு தினம் அனுஷ்டிப்பு

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

39 ஆண்டுகள் கடந்தும் நினைவில் திலீபன் - தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Observance Of Thileepan S Memorial Day

இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு திலீபனின் நினைவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன், குறித்த நிகழ்வில் அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.      

யாழ்ப்பாணம் – பல்கலைக்கழகம்

தொடர்ந்து 12 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் – பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று(26.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 ஆண்டுகள் கடந்தும் நினைவில் திலீபன் - தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Observance Of Thileepan S Memorial Day

இதன்போது, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது பொது நினைவிடத்தில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், மாணவர்களால் மலர் தூலி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல் – தீபன்

திருகோணமலை – வெருகல் பிரதேச சபை

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாள் மற்றும் இறுதிநாள் நிகழ்வு நேற்று(26.09.2026) சனிக்கிழமை மாலை வெருகல் பிரதேச சபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

39 ஆண்டுகள் கடந்தும் நினைவில் திலீபன் - தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு | Observance Of Thileepan S Memorial Day

அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபர் குமார் ஜெயக்குமாரன் தியாக தீபம் திலீபனுக்கு தனது மரியாதையை செலுத்தியதுடன், முன்னாள் போராளிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி, அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். “முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்க நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என குமார் ஜெயக்குமாரன் தெரிவித்தார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments