ஜோதிடத்தில் மிக மங்களகரமான கிரகமான குரு பகவான், அக்டோபர் 31 அன்று தனது உச்ச ராசியான கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு நுழைகிறார்.
இந்த பெயர்ச்சி 2027 ஜனவரி 25 வரை நீடிக்கும்.
குருவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அமோக வளர்ச்சியையும், பணக்கஷ்டங்களில் இருந்து விடுதலையையும் தரவுள்ளது.
அவ்வாறு குருவின் அருளால் பண மழையில் நனையப் போகும் அந்த 3 ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்
| சிம்மம் | சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் அதிகரிக்கும்.நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.நிதி ரீதியாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். |
| தனுசு | தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் மற்றும் லாபகரமானதாகவும் இருக்கும்.முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயரத்தை அடையலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேறுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.நிதி நன்மைகளும் கிடைக்கும்.புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.புதிய திட்டங்களால் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். |
| துலாம் | துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.அதுவும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. |
