ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திலீபன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த அவர், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பின்னர், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேர்கடமை நிமிர்த்தமாக தமிமீழக்கடல் பரப்பில் சென்று கொண்டியிருந்தவேளை இந்தியா கடல்படையனர் அவர்களைக் கைது செய்து இலங்கை கடல் படையிடம் ஒப்படைத்தனர்?

அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் சயனைட் அருந்தியதில் பன்ரண்டுபேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு பன்னிருவர் உயிரிழந்த நிலையில், தாமீம், கருணாநிதி, தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய ஐவர் சயனைட் உட்கொண்ட பின்னரும் உயிர் காப்பாற்றப்பட்டனர்.
அதற்குப் பின்னர் சில நாட்களுக்குள் இந்திய அமைதிப்படைக்கும் தமி ழீ ழ வி டு த லைப் பு லி களுக்கும் இடையில் நேரடி ஆயுத மோதல் ஆரம்பமானது.
ஆகவே திலீபனின் மரணம், புலேந்தி அம்மான்–குமரப்பா உள்ளிட்ட பன்னிருவரின் மரணம், அதன் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் ஆரம்பித்த போர் என்பவற்றை தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் பார்க்க முடியாது.
அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஒரு வரலாற்றுத் தொடராக அமைந்தன.

[தலைவர் இல்லையென்றால் புலேந்திரனே போராட்டத்தை தொடர்பார் என்பதை இந்தியா நம்பியது]
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசு எழுத்துமூலமாக ஏற்றுக்கொண்டது.
1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் சேபால அட்டிகல்ல பொதுமன்னிப்பு ஆவணத்தை யோகரத்தினம் யோகியிடம் கையளித்தார்.
அப்படியானால் அந்தப் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேரின் சட்டநிலை என்ன? அவர்களை எந்த அடிப்படையில் கொழும்பிற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த முயன்றார்கள்?
இந்தியாவின் உத்தரவாதத்தை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த இயக்கத்தின் தளபதிகளை இலங்கை அரசு கைது செய்தபோது, அவர்களைப் பாதுகாக்க இந்தியாவால் ஏன் முடியவில்லை?
இந்திய இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்தியத் தூதுவரும் முயன்றபோதும் இலங்கை அரசின் முடிவை மாற்ற முடியாமல் போனது ஏன்?
அதுவரை இந்தியப் படையின் பாதுகாப்பில் இருந்த பதினேழு பேரிடமிருந்து அந்தப் பாதுகாப்பு இறுதியில் ஏன் விலக்கப்பட்டது?
இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு பலாலியில் உயிரிழந்த பன்னிருவரின் வரலாற்றை முழுமையாக எழுத முடியாது.
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய–இலங்கை ஒப்பந்தம் ஒரு புதிய தொடக்கமாகக் காட்டப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
செப்டம்பர் மாதம் திலீ்பன் உயிரிழந்தார்.
ஒக்டோபர் மாதம் புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பன்னிருவர் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் பு லி களுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள், சில வாரங்களின் பின்னர் போரின் எதிரெதிர் பக்கங்களில் நின்றார்கள்.

அந்த மாற்றத்தின் நடுவில் தி லீ பனின் உயிரும் போனது.
குமரப்பா, புலேந்தி அம்மான் உள்ளிட்ட பன்னிருவரின் உயிர்களும் போனது.
அதனால் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் நடந்த சம்பவம் பன்னிரண்டு போராளிகளின் மரணம் மட்டும் அல்ல.
இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் மீது தமிழர் தரப்பில் இருந்த நம்பிக்கை முறிந்து விழுந்த முக்கியமான தருணங்களில் ஒன்றாகவும் அது அமைந்தது.
குமரப்பாவையும் புலேந்தி அம்மானையும் நினைவுகூரும்போது அவர்கள் இறந்த நாளை மட்டும் நினைவுகூருவது போதாது. அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள்?
எந்த அரசியல் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார்கள்?
அப்போது பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்ததா?
அவர்களை ஏன் கொழும்பிற்கு கொண்டு செல்ல முயன்றார்கள்?
அதனை இந்தியாவால் ஏன் தடுக்க முடியவில்லை?
இந்தியப் பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது?
அதன் பின்னர் ஏன் இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் வெடித்தது?
இந்தக் கேள்விகளுடன்தான் அந்த வரலாற்றை நாம் வாசிக்க வேண்டும்.
அப்போதுதான் பலாலியில் உயிர்நீத்த பன்னிருவரின் வரலாறும், 1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் முறிவும் முழுமையாகப் புரியும்.

சுவாமி சங்கரானந்தா
