மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டிட சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளா்.

இந்தசம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர். 

எதிர்பாராதவிதமாக இடிந்து வீழ்ந்த சுவர்

 கிண்ணியடி வீதியைந் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் எனும் மேசன் தொழிலாளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பில் துயரம் : சுவர் இடிந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம் | Family Man Dies After Wall Collapses In Batticaloa

சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடு ஒன்றுக்கு சம்பவ தினமான இன்று காலை இரு மேசன் தொழிலாளர்கள் கொங்கிறீட் கொட்டுவதற்காக சட்டிங் (பலகை) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

ஏற்கனவே உயிரிழப்பு

 படுகாயமடைந்த இருவரையும் அருகிலுள்ள சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிண்ணையடியைச் சேர்ந்த சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததுடன் படுகாயமடைந்த மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் துயரம் : சுவர் இடிந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம் | Family Man Dies After Wall Collapses In Batticaloa

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments