இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணி

இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணிக்கு ஷஹீன் அப்ரிடியும் தலைமை தாங்கினர். இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் | Tri Nation Odi Cricket Pakistan Defeats Sri Lanka

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சல்மான் ஆஹா 107 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தார்.

இதனையடுத்து, 306 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிலர் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், பின்வரிசை வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப் பெற முடியவில்லை.

இறுதிவரை போராடிய இலங்கை! வெற்றியைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் | Tri Nation Odi Cricket Pakistan Defeats Sri Lanka

இதனால் வெற்றியை நெருங்கியிருந்த இலங்கை அணி 37 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments